Type at least 2 characters to search
No results found for ""
Courses
Lessons
navigate open
See all results →
இயேசுவின் வாழ்வும் ஊழியமும்

இயேசுவின் வாழ்வும் ஊழியமும்

Search Course

Type at least 3 characters to search

Search through all lessons and sections in this course

Searching...

No results found

No matches for ""

Try different keywords or check your spelling

results found

இயேசுவின் வாழ்வும் ஊழியமும்

Lead Writer: Randall McElwain

Course Description

இந்தப் பாடத்திட்டம் இன்றைய வாழ்வுக்கும் ஊழியத்திற்கும் ஒரு முன்மாதிரியாக இயேசுவின் வாழ்வையும் ஊழியத்தையும் ஆராய்கிறது.

What You'll Learn

ஊழியத்திற்கான ஆயத்தம்
இயேசுவைப் போல ஜெபம் செய்தல்
இயேசுவைப் போல வழி நடத்துதல்
இயேசுவைப் போல போதித்தல்
இயேசுவைப் போல பிரசங்கித்தல்
இயேசுவும் தேவனுடைய ராஜ்யமும்
இயேசுவைப்போல அன்பு கூறுதல்
சிலுவையும் உயிர்த்தெழுதலும்
ஒரு ஆவிக்குரிய மரபை விட்டுச் செல்லுதல்

Course Objectives

ஒவ்வொரு பாடத்திலும் நோக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Introduction

இந்தப் பாடத்திட்டம் இன்றைய வாழ்வுக்கும் ஊழியத்திற்கும் ஒரு முன்மாதிரியாக இயேசுவின் வாழ்வையும் ஊழியத்தையும் ஆராய்கிறது. இது சுவிசேஷ புத்தகங்களின் விரிவான ஆய்வு அல்ல. மாறாக, இன்றைய ஊழியத்திற்கான பாடங்களைக் கற்றுக்கொள்வதற்காக, இயேசுவின் ஊழியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்சங்களை இந்தப் பாடத்திட்டம் ஆராய்கிறது. கிறிஸ்துவின் முழு வாழ்க்கையையும் நீங்கள் படிக்க விரும்பினால், புத்தகத்தின் பின்பகுதியில் உள்ள 'பரிந்துரைக்கப்பட்ட ஆதார நூல்கள்' பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள புத்தகங்களைப் பாருங்கள்.

நீங்கள் ஒரு குழுவாகப் படிப்பதானால், பாடப்பகுதியை ஒருவர் மாறி ஒருவர் வாசிக்கலாம். வகுப்பு விவாதத்திற்காக நீங்கள் அவ்வப்போது இடைநிறுத்தம் செய்யவேண்டும். வகுப்புத் தலைவராக, விவாதமானது படிக்கப்படும் பாடப்பொருளிலிருந்து விலகிச் செல்லாமல் பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பாகும். ஒவ்வொரு விவாத நேரத்திற்கும் ஒரு கால வரம்பை நிர்ணயிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

கலந்துரையாடல் கேள்விகள் மற்றும் வகுப்பறைச் செயல்பாடுகள் ► என்ற குறியீட்டின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்றை நீங்கள் காணும் போதெல்லாம், அதைத் தொடர்ந்து வரும் கேள்வியை (கேள்விகளை) கேட்டு, மாணவர்கள் அதற்கான பதிலை விவாதிக்க அனுமதியுங்கள். அர்த்தமுள்ள விவாதத்திற்குத் தயவுசெய்து நேரம் ஒதுக்குங்கள். ஏனெனில் இவையில்லாமல், மாணவர்கள் இயேசுவின் ஊழியத்தைப் பற்றிய தங்கள் படிப்பினை இன்றைய ஊழியத்துடன் தொடர்புபடுத்திக் காணத் தவறிவிடலாம்.

பாடத்திட்டம் முழுவதும், முக்கிய பாடப்பகுதியிலும் அடிக்குறிப்புகளிலும் பல வேதப் பகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. வகுப்பில் சத்தமாக வாசிக்கப்பட வேண்டிய பகுதிகளும் அம்புக்குறிகளால் ► சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மாணவர்கள் நீண்ட பகுதிகளை வகுப்புக்கு வரும் முன்னரே வாசித்துவிட்டு வரவேண்டும். சிறிய பகுதிகள் வகுப்பில் வாசிக்கப்பட வேண்டும்.

"ஒரு நெருக்கமான பார்வை" என்ற தலைப்பிலான பிரிவுகள், பாடத்தின் விவாதத்துடன் தொடர்புடைய சிறப்புக் கருப்பொருள்களில் கவனம் செலுத்துகின்றன.

ஒவ்வொரு பாடமும் ஒன்று அல்லது இரண்டு வீட்டுப்பாடங்களை உள்ளடக்கியிருக்கும். மாணவர்கள் Shepherds Global Classroom சான்றிதழ் பெற விரும்பினால், அவர்கள் வகுப்பு அமர்வுகளில் கலந்துகொண்டு வீட்டுப்பாடங்களை முடிக்க வேண்டும். முடிக்கப்பட்ட வீட்டுப்பாடங்களைப் பதிவு செய்வதற்குப் பாடத்திட்டத்தின் இறுதியில் ஒரு படிவம் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களை ஆசிரியர்களாகத் தயார்படுத்துவதே இந்தப் பாடத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். வகுப்புத் தலைவர் மாணவர்கள் தங்கள் கற்பித்தல் திறனை வளர்த்துக்கொள்ள வாய்ப்புகளை வழங்க வேண்டும். உதாரணமாக, வகுப்புத் தலைவர் அவ்வப்போது ஒரு மாணவரைப் பாடத்தின் ஒரு சிறிய பகுதியை வகுப்பில் கற்பிக்க அனுமதிக்க வேண்டும்.

Ready to Start Learning?

Choose a lesson from the sidebar, or jump right in.

Start Lesson 1